Ads 468x60px

Social Icons

Saturday 6 October 2012

வாகனங்களில் ஏறாத வார்த்தைகள்


வாகனங்களில் ஏறாத வார்த்தைகள்


சிறு பிராயத்து
மிதி வண்டிபோல மூலையில்
சாய்ந்து கிடக்கிறது
பயன்படாத வார்த்தைகள்

கார்களும் அதிநவீன
விமானங்களும்
மொழிக்குள் வந்த பின்பும்
வாகனங்களில் ஏற்றமுடியாத
அனுபவங்கள்
மனதில் கனக்கின்றன.

இந்த மரத்தில் இருந்துதான்
அந்தப் பூ மலர முடியும்

அதோ
என் பிணத்தின் முன் நின்று
ஏதோ நினைத்து நகரும்
அவளிடம் இதுவரை
பேசாத வார்த்தைகளும்-
அனுபவங்களை
அள்ளி வராத வார்த்தைகளும்-
என்னோடு சேர்ந்து
மரணிப்பதைப் பொறுக்க முடியவில்லை.

No comments:

Post a Comment