Ads 468x60px

Social Icons

Saturday 6 October 2012

ஒரு நத்தை தேடி


ஒரு நத்தை தேடி


நீரில் மிதக்கும் இலைமீது
முன்பின் நகரும்
சிற்றெறும்பில் கவனம் குவிகிறது

மழையீர தாவர உடல்களின்
நடுவே
ஊர்ந்து மறைகிறது அரவம்

பாறைப்பிளவில்
மெத்தென்று காட்சியாகிறது
காளான் கூட்டம்

ஆகாயம் கடலில் கரைந்து
நட்சத்திர மீன்கள்
உப்பு நீரில் அலைகின்றன

போதி மரத்துக்கு வெளியே
மனிதம் தீண்டாத மறைபொருள்
நத்தையாகக்
கூடு ஒன்றில் ஒளிகிறது

No comments:

Post a Comment