Ads 468x60px

Social Icons

Poems

மனிதம் கலக்காதே



காட்டிலாக்கா அதிகாரியிடம்
நீட்டிய அனுமதிக் காகிதம்
கிழித்து
முகமற்ற முகத்தில் எறிந்து
காடு பேசாது பேசியன
.........................................



அரவம் அணைக்க என்று
நகரும் மரங்களின்
அந்தரங்கம் கலைக்காதே

பூச்சிகள் உறங்கும்
புற்களை மிதிகாதே

எறும்பின் வழித்தடத்தில்
பயண மூட்டைகள் வைக்காதே

நதியின் ஆனந்த ஓட்டத்தில்
சுவர் முகம் எழுப்பாதே

தாவர மௌனத்தில்
மொழியை ஒலிக்காதே

பறவைகளின்
இன்னிசை வெளியில் உன்
எந்திர சப்தம் நுழைக்காதே

தாயின் அரவணைப்பில்
பல்லுயிர்கள் பால்குடிக்கும்
இடம் அதில்
அந்நியனுக்கு என்ன வேலை?

முடிவாக ஒன்று.....

காற்று
உயிர்வளர்க்கும் இடத்தில்
மனிதம் கலக்காதே!


ஜோதியில் கலந்தேன்                          

தொடக்கத்தில்
தொட்டில்மீது சுழன்றப்
பொம்மைகள் பற்றி
நடந்தேன்

கண்கள் தீண்டிய
வசீகரம் பார்த்து
தவழ்ந்தன கால்கள்

நீட்டிய விரல்கள் பிடித்து
தத்தி
விழுந்து எழுந்து நடந்தேன்

வீடு தாண்டி
தெருக்கள் கடந்து
தேசங்கள் சுற்றி வந்தேன்

எல்லையில்லா வெளி திணித்த
அனுபவங்கள் மீதும் விரிந்தன
மனதின் கால்கள்

எல்லா நேரமும் நடக்கிறேன்

தூங்கும்போதும்
மேஜையில் அமர்ந்து
உண்ணும்போதும்
நடப்பதை நிறுத்துவதே இல்லை

கால்களுக்கு முன்புபோல
பலம் இல்லை
உடல் சோர்வு, மனச் சோர்வு
இரண்டும் கலந்த வலி


இருந்தும் நடப்பது
நிற்காது நடக்கிறது

எதையோ அடைய
எதையோ பார்த்துவிட
பிறகு பார்த்தது சலித்து
அடைந்தது துறந்து

மீண்டும் நம்பிக்கை வளர்த்து
நடப்பது தொடர்கிறது

பயண தூரம் தெரியாமலேயே
பயணத்தில் இருக்கிறேன்

ஒவ்வொரு இடமாகப் பார்த்து
வேறுவேறு மனிதர்களோடுப்
பழகி
அனுபவம் அழியாது
வலியும் அழியாது
பயணம் தொடர்கிறது

சிலரோடு விரும்பி சேர்ந்து
நடந்தேன்
வேறு சிலர்... அவர்களே விரும்பி
என்னோடு நடந்தார்கள்

இறுதிவரை பயணம் உன்னோடு
என்று
நம்பிக்கை விதைத்துக் கூட
நடந்தார்கள்

மனம் விரும்பிய ஒரு
உறவை இறுக்கிப் பிடித்து
நின்றுவிட முடிவு செய்து
கைகள் நீட்டினேன்

வெற்றிடம் தீண்டிப் பயந்து
அங்கும் இங்கும் ஓடினேன்

முன்பும் பின்பும்
சுற்றிலும் பார்க்க யாருமில்லை

கண்டடைந்ததையாவது
கெட்டியாகப் பற்றி
மனவெளிக்குள் வாழ
உள்ளே எட்டிப்பார்த்தேன்

கூட நடந்தவர்கள்
நான் அறியாதே
கொட்டிப்போனக்
குப்பைகளே கிடந்தன

அழுக்கேறிய எனது
ரூப அரூப உடல்கள்
வெறுத்து.... ஒருநாள்


உள்ளேயும் வெளியேயும்
தீவைத்து
ஜோதியில் கலந்தேன்



..............................................................................


'கவி' மீது தீபம் இதழ்
 

மரபுக் கவிதைகளின் ஆதிக்கம் குறைந்து புதுக்கவிதைகளின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் இன்றைய நிலையிலும் தொடரப்பட்டு, அங்கொன்று இங்கொன்றுமாக, சிறு சிறு காவியங்கள் எழுந்த வண்ணம்தான் இருக்கின்றன. அப்படி எழுந்தவொரு நூல்தான்  இந்த நூல் (கவி)

இன்றைய சமூகத்தில் இருக்கும் மனிதாபிமானமின்மை, போலி வாழ்க்கைமுறை, செல்வம் தேடலையே குறிக்கோளாகக் கொண்ட  வாழ்க்கை நெறி மற்றும் ஏமாற்றுத்தனம் ஆகிய குறைபாடுகளை நீக்கச் செய்வதற்கான மற்றுமொரு முயற்சியே இந்நூல். அநாதையாகப் பிறந்து சமுதாயத்தின்மீது காதல் கொண்ட கவிஞனாக மாறி முடிவில் ஏமாற்றுக்காரர்களால் நஞ்சிட்டுக் கொல்லப்படும் ஒரு கவிஞன்தான், இச்சிறு காவியத்தின் கதாநாயகன்.

நூலாசிரியர் க.வை.பழனிசாமியிடம்  கவிதை இருக்கிறதென்பதை யாரும் மறுக்க முடியாது. உதாரணத்திற்கு சில :

ஊர்கூடி அழுதார்கள்
சொற்களில் மட்டும்
சோகம் ஒட்டிக்கொண்டிருந்தது
அங்கு
அழுவது....
தொழிலாக நடந்தது.

பட்டினிகள்
பந்தியில் புகுந்துவிட்டால்...
எறிகின்ற எச்சில்களுக்கு
எவர் வருவார்?

கவிஞன் என்பவன் அவனிடம் உண்மையான கவிதை குடிகொண்டிருக்கும் பட்சத்தில், மெல்ல மெல்ல ஒரு புரட்சிக்காரனாக மாற்ப் போய்விடுகிறான். இதற்கு பாரதியே தலை சிறந்த உதாரணம். அதுபோலொரு புரட்சிகாரனய்த்தான் இந்நூலின் நாயகனும் சித்தரிக்கப்படுகிறான். ஆக, கவிதை தர்மமும், கவிஞனின் தர்மமும் இந்நூலில் காப்பாற்றப்படுகின்றன.

அட்டை, அமைப்பு, அணுகுமுறை, அபிப்பிராயம் என எல்லாவற்றிலும் ஒரு புதுமையைத் தெரிவிக்கிறது இந்நூல்.

'கவி' நூல் விமர்சனம்: தாமரை 1987 டாக்டர் இராகுலதாசன்

'கவிதை என் கைவாள்' என்ற முழக்கத்தை இன்று நம்மிடையே வாழும் ஒரு ஒரு நவகவி நமக்களித்தான். அந்த முழக்கத்தை மேற்கொண்டு, இன்று தமிழ்க் கவிதை படைத்து வரும் கவிஞர்கள் வரிசையில் கவிஞர் க.வை.பழனிசாமி கவனத்திற்கு உரியவராகிறார்.

பைபிள் நடையும், கவிஞர் கண்ணதாசனின் நடையும் நினைவு படுத்தும் எளிமை மனதை கவர்கிறது. கவிதை அமைப்பு மிக நெகிழ்ந்து போகிற இடங்களில், கருத்துக்கள் கூர்மையாக அமைந்து வாசகர்களை ஈர்த்துக் கொள்கிறது. நூலின் முக்கியமான பகுதி எனக் கொள்ளத்தக்க போராட்டப் பகுதி இன்னும் சிரிது விரிவாக, அமைக்கப்பட்டிருக்கலாம்.

இவன்
தான் வடித்த குருதியில்
சிவப்பானவன்.
உலகை
சிவந்து விழிக்கும்
உரிமையுள்ளவன்

என்ற வரிகள் 'கவியை' சரியாகவே நமக்கு அடையாளம் காட்டுகின்றன. 'தான் வடித்த குருதியில் சிவப்பானவன்' என்ற வரி - சிகாகோ நகரில் சிந்திய முதல் ரத்தத்தை நினைவுபடுத்தும் ஆழமுடையது.

'கவி'யும் அவளும் மணம் செய்து வாழத் தலைப்படுகின்றனர். வாழ்க்கை யாருடையதே ஆயினும், அது சூழ்நிலையால், சுற்றுப்புறத்தால் சமுதாயத்தினால் தான் தீர்மானிக்கப்படுகிறது என்ற சமூக விஞ்ஞான உண்மையைக் கவிஞர் பழனிசாமி மிகவும் ஆழமாகவே குறிப்பிடும் இடம் கவனத்துக்கு உரியது.

வாழ்க்கையின்
முதல் அத்தியாயத்தை மட்டும்
இருவரும்
எழுதி முடித்தார்கள்.
மீதி அத்தியாயங்களை
இவர்களின் அனுமதியின்றி
சமூகம் எழுதத் தொடங்கியது.

என்கிறார் கவிஞர். கவிதையும், காட்சி அமைப்பும், கவிஞரின் தெளிவான சிந்தனையும் ஒருங்கிணைந்து நிற்கும் சிறப்பான இடம் இது எனலாம்.

மனிதனை மனிதன்
நேசிக்கும் மந்திரமே
பூமி மூச்சிழுக்கும் காற்று.

வீதியின் புழுதியில்
வீழ்ந்து கிடக்கும் வாழ்வுகளை
கைப்பிடித்துக் கூட்டி வரும்
மதமும் இஸமும்
எனக்கு வேண்டும்.

உலகின் கோடியில்
அழுகின்ற குழந்தையை
அள்ளியெடுக்கும்
பொதுமொழி வேண்டும்.

என்று 'கவி' முழங்குகிறான். சாதி, இன, சமய, கால தேச வர்த்த மானங்களையெல்லாம் கடந்து நிற்கும் அந்தப் 'பொது மொழி' மார்க்ஸிய மொழிதான் என்பதை நூலுன் ஆசிரியர் கவிஞர் க.வை.பழனிசாமி ஆழமாகவே வெளிப்படுத்துகிறார்.

கவிஞரின் எழுதுகோல் சரியான திசை நோக்கித்தான் விழித்துப் பயணம் மேற்கொண்டிருக்கிறது. அதற்கான காரணத்தை அவரே முன்னுரையில்

தேவையின் உந்துதல்
பாலைவனத்தையும்
தோண்டிப்பார்க்கும்.
சூரியனையும் விழுங்கும்
சூழல்கள் அறிந்தும்
எழுதுகோல் உறங்குமா?

என்று சொல்கிறார். தமிழ்நாட்டின் தேவை அறிந்து, சூழல் அறிந்து, ஒரு நல்ல கதைக் கவிதை நூலினைத் தந்துள்ள கவிஞர் க.வை.பழனிசாமி பாராட்டுக்கு உரியவர்.

'கவி' :  மேலாண்மை பொன்னுசாமி  தீக்கதிர் இதழில்

புதுக்கவிதையில் ஏன் தேக்கம்? என்ற கேள்வியை எழுப்பிய கவிஞர் பாலா தனது முன்னுரையில் 'புதுக்கவிதையில் புதுமைகள் - சாதனைகள் செய்யாமலிருப்பதே' என்று பதிலும் தருகிறார்.

சாதனைகள் செய்கிற முதல் முயற்சியை துணிச்சலோடு துவங்கியிருக்கிறார் கவிஞர் க.வை.பழனிசாமி.

'கவி' என்ற தலைப்பில் ஒரு கவிதை நூல்; பல்வேறு கவிதைகள் அடங்கியதல்ல. இது சமூகம் தழுவிய, பிரபஞ்சம் தழுவிய ஒரு சமூக மனிதனின் வாழ்க்கையை கதையாகச் சொல்கிற ஒரே கவிதையைக் கொண்ட நூல்.

தேவையின் உந்துதல்
பாலைவனத்தையும்
தோண்டிப்பார்க்கும்.
சூரியனையும் விழுங்கும்
சூழல்கள் அறிந்தும்
எழுதுகோல் உறங்குமா?

என்ற பிரகடனத்தோடு பேனாவைப் பிடித்த இந்தக் கவிஞர்,

'புதிய வித்து பூமியில் விழும். மனித கீதம் மண்ணில் எழும்' என்ற வைரம் பாய்ந்த - பரபரப்படையா - அமைதியான நம்பிக்கையோடு, கவிதையைப் படைக்கத் துவங்குகிறார்.

ஒரு 'கவி'யின் கதை இது.  அவன் பெயர் என்ன? எங்கு பிறந்தான்? எந்த மாவட்டம்? என்ன ஜாதி? என்ற கேள்விக்கெல்லாம் ஒரே பதில்!

மனிதனுக்கு
மனிதன் என்ற பெயர் மட்டும்
மண்ணில் இருக்கும்.
பூமியைப் பிளக்கும் பிரிவினைச் சொற்கள்
அகராதியிலிருந்து அகற்றப்படும்.

கடலோரக் குப்பத்தில் காலத்தை ஓட்டுகிற இந்தக் கவியின் கவிதையையும் கவிதையின் சத்திய உஷ்ணத்தையும் நேசித்து ஒரு இளம்பெண் எதிர்படுகிறார்.

''அவளின் பெருவிரல் நுனியில் பெரிய புராணம் புதைந்து கிடந்தது. அடிதொடங்கி நுனிவரை அனைத்து மொழி நூல்களும் அடங்கிக் கிடந்தன'' கவிதைகளை கருத்துக்களை விவாதித்தனர்.

''அவளின் வரவு ஏழ்மையின் முன்பு பொங்கி வைத்த சோறு. மூட்டை தூக்கும் மனித முதுகில் பூ வருடல். வர்க்க பேதங்களில் வாடிய பயிர்களிடை பெய்த மார்க்சீய மழை''

அயினும் அவளை எச்சரிக்கிறான்: ''என்னோடு நீ நடந்தால் பாலை வழிதான் உனதாகும்.''

''அவளோ முத்தெடுக்க வேண்டுமென்றால் மூழ்கத்தானே வேண்டுமென்றாள்.''

அவளோடு வாதாடித் தோல்வியுற்றான்.

''கவிஞன் அங்கு தோல்வியின் சுகம் தேடினான். அன்றுதான் காதல்மீதே காதல் கொண்டான்''

''காற்று கால்வைக்க முடியாத'' ''வானத்தின் முகம் பார்க்க முடியாத'' புறாக்கூண்டே வீடாகக் கிடைத்தாலும்.... காதலின் தாம்பத்திய அன்பின் வலிமையால் தாங்கி வாழ்கிறர்கள். அந்த வீடு வாழத் தகுதியற்றதாகிப் போனதால்... புறம்போக்கில் குடிசைபோட்டு வாழ்கிற சேரியில், இந்தக் கவியும் ஒரு கூடுகட்டிக் கொள்கிறான்.

அந்தப் புறம்போக்கு நிலத்தை ஒரு சாராய ஆலை அதிபர் கைப்பற்றிக்கொண்டு சேரியை காலி செய்யச் சொல்கிறார்.

பயந்து கதறுகிற மக்களுக்கு தைரியமூட்டி அணி சேர்த்து தலைமையேற்றுப் போராடுகிறான்.

குடிசைகள் தீ வைக்கப்பட.... அவன் மனைவி பிரசவ வேதனையில் நெளிய... ஜனங்களைத் திரட்டி சாலை மறியல் நடத்துகிறான் கவி.
பேச்சு வார்த்தைக்கு அழைக்கிற அதிகாரிகள், கவியை வஞ்சகமாய்க் கொன்று விடுகின்றனர்.

அவன் இறந்தாலும், அவன் குழுந்தை பிறக்கிறது. போராட்டம் தொடர்கிறது.

''நாளும் பிறக்கும் சூரியன்களை நாய்களா விழுங்கும்?'' என நம்பிக்கை மிகுந்த வரிகளோடு முடிகிறது இந்தக் காவிய நூல்.

இந்தக் கவிதை நூல்... சத்தியத்தை தீபமாக ஏற்றுகிறது.

அந்தத் தீப வெளிச்சத்தில் அரசின் முகமும், அதிகாரிகளின் குரூரமும், சமுதாயத்தின் முரணும், மத இன மோசடிகளும் சுத்தமாக அம்பலமாகின்றன.

இப்படியோர் உண்மை மிகுந்த ஒரு மனிதனின் வாழ்வைக் கருவாகக் கொண்ட சமூக நாவலையே கவிதை நூலாக காவியத் தன்மை நிறைந்த நூலாக படைத்துள்ளார் கவிஞர் க.வை.பழனிசாமி.

எந்தக் கவிஞரின் சாயலும் இல்லாமல்.... சொந்த முகத்தோடு இந்தக் கவிஞர் வெளி வந்திருக்கிறார். எந்தக் கவிஞரும் துணியாத ஒரு காரியத்தில் காவிய நூல் படைக்கிற செயலில் இவர் துணிந்து முனைந்து வெற்றியும் கண்டிருக்கிறோம்.

எந்த இடத்திலும் கவித்துவம் குறையாமல்... பூடகத் தன்மை படிந்து விடாமலிருப்பதில் கவிஞர் எச்சரிக்கையாய் இருந்திருக்கிறார் என்பது பாராட்டத்தக்கது.

.......................................................................................


சோதனை முயற்சியே எழுத்தாய்.....



பாலா ..... 'கவி' கதைக்கவிதை குறித்து .... இன்றைய அனுகூலமற்ற சூழலில் கவிதைத் தொகுதி வெளியிடுகின்றவர்கள்சோதனை அவாவும் சாதனை வேட்கையும் நிறைந்தவர்களே. க.வை.பழனிசாமியின் இந்த கவிதை நூல் ஒரு 'ணீனீதீவீtவீஷீus ஜீக்ஷீஷீழீமீநீt'  என்பது இதன் அச்சிலும் அமைப்பிலும் கதாநாயகன் பற்றிய சிதரிப்பிலும் தெரிகிறது .

பாலா..... 'பிஞ்சு விழிகளில்' கவிதை நூலுக்கு எழுதிய முன்னுரையில் .....பழனிசாமியின் முந்தைய கவிதைத் தொகுதிகளில் இருந்து மட்டுமல்ல, இன்றைய பல கவிதைத் தொகுதிகளில் இருந்தும் வேறுபட்ட தொகுப்பு இது.

வெண்மை ஒரு நிறமல்ல நூலின் பின்னுரையில் பாலா ...   மொழிக்குள் இன்னொரு மொழியை உருவாக்குவதில்தான் கவிதை வெற்றி பெறுகிறது. ( றிஷீமீtக்ஷீஹ் வீs நீக்ஷீமீணீtவீஸீரீ ணீ றீணீஸீரீuணீரீமீ  ஷ்வீtலீ வீஸீ ணீ றீணீஸீரீuணீரீமீ )  ஒரு வகையில் பார்த்தால் தனித்துவமான ஒரு வெளியீட்டு மொழியைச் சாதித்தலே கவிதை எனலாம். சங்கக் கவிகள் முதல் கம்பன் வரை யாரை நோக்கினும் மொழியைப் புதுக்கிப் புகழ்பெற்ற சரித்திரமே இலக்கிய வரலாறு என்று ஏற்றம் பெற்றுள்ளது.

சிலர் நினைக்கிறார்கள்.; ஒரு நற்கருத்தை எடுத்து வைப்பதே கவிதை என்று. நற்கருத்து கவிதையாக்கப்பட வேண்டும். அதுவே கவிதையாவதில்லை. விதவைத் திருமணம் பற்றி எழுதியதால் பாரதிதாசன் புரட்சிக்கவியாக மலரவில்லை. ''வேரிற் பழுத்த பலா'' என்றும் ''குளிர் வடிகின்ற வட்டநிலா'' என்றும் கொண்டாடப் படவேண்டியவர்கள் சமூகக் கொடுமையால் இதயம் துண்டாடப்படுகின்றார்களே என்று அவர் பாடிய முறைக்காகவே புரட்சிக் கவியாக கருதப்படுகிறார்.

விடுதலை வேண்டும் என்ற நாட்டுப் பற்றுக் குரல் பாரதியைக் கவியாக்கவில்லை. ''தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்'' என்று எழுதித் தன் கருத்தைக் கலைநயப்படுத்திய காரணத்திற்காகவே பாரதியைச் சிறந்த கவி என்று போற்றுகிறோம்.

கருத்துக்களை நேரடியாகத் தரும் முயற்சியே புதுக்கவிதை என்று சொல்கின்றவர்கள் இந்த உண்மையை மறந்து விடுகின்றனர். இன்றைய புதுக்கவிதையின் அயற்சி நிலைக்கு இதுவே பிரதான காரணம் எனலாம். கலை நயப்படுத்துதலில் புதுமையும் செழுமையும் கூடுகின்ற பொழுதுதன் புதுக்கவிதை வெர்றி பெற இயலும்.

இன்றைய தமிழ்க் கவிதை சூழலில் கவனிக்கத்தக்க ஓர் இளங்கவியாக மலர்ந்திருப்பவர் கவிஞர் க.வைபழனிசாமி. ''பொற்கைப் பாண்டியன் இல்லை'' என்ற தன் முதல் கவிதைத் தொகுதி முதல் அண்மையில் வந்த ''பிஞ்சு விழிகளிலே'' வரை தன் கவிதை மொழியைச் செப்பம் செய்து ஒரு நுட்பமான வெளியீட்டு மொழியை உருவாக்கிக் கொண்டுள்ளார் பழனிசாமி. அவரின் தனித்தன்மைக்கு  இன்னொரு சான்றாக வெளிவந்துள்ளது 'வெண்மை ஒரு நிறமல்ல' என்ற இந்தக் கவிதை நூல்.

தன் உணர்வெல்லைகளைக் கவிஞன் தன் நோக்கிற்கும் போக்கிற்கும் ஏற்ப விரித்துச் செல்கின்றான். கனவு - நனவு என்ற பேதங்களற்று சிலரின் எல்லைகள் விரிகின்றன. நாடு மொழி என்ற எல்லைகளைத் தாண்டி சிலரின் பார்வை விரிகிறது. மனசைச் சீண்டும் ஒரு ஒற்றை ரோசாவின் சிரிப்பைச் சொல்லிக் காதல்வெளியில் பாடித்திரியும் பழனிசாமி இன்று மானுடம் முழுமையையும் அள்ளி அரவணைக்கும் பேருணர்ச்சித் திளைப்பில் மாறி நிற்பதை இந்நூல் வெளிக்காட்டுகிறது.

மண்ணை, மனிதனை, இயற்கையை, மாநுட ஆற்றலை, மனிதப் படைப்புகளாம் கலை, கவிதை, அறிவியல் தொழில் நுட்ப வாழ்க்கையை பழனிசாமி தனதாக்கிக் கொள்கிறார். ''ஙிக்ஷீவீபீணீறீ விஹ்stவீநீவீsனீ''  என்ற வகைக் கவிதைகள் இறைவனை தலைவனாகவும் தன்னைப் பெண்ணாகவும் கற்பித்து எழுதப்படும் உணர்வு நிலைப்பாட்டை நாம் கண்டிருக்கிறோம்.

 பழனிசாமியின் இந்தக் கவிதைகளில் மானுடத்தை அவர் தனதாக்கி மகிழ்ந்தும், பிறராக்கி அறிவுறுத்தியும் மகிழ்வெய்துகின்றார். ஒரு நிரந்தரத்தை தன் நிகழ்காலச் சொற்களினால் கட்டிப்போட விழைகின்றார். தமிழுக்கு இது புதுக்கருத்து புதுச்சிந்தனை.

வாழ்வில் கரைகின்ற போதும் சரி, வாழ்க்கைக்கு கருத்துரை பகர்கின்றபோதும் சரி, பழனிசாமியின் சொற்களில் உள்ள தொனி உணர்வு நிலைப்பட்டு ஒலிக்கின்ற தன்மையால் கவிதையாக மலர்கிறது. தமிழுக்கும் தனக்கும் ஒரு புதுமொழியில் ஒரு புத்துரை வழங்கும் முயற்சி இது. 

கலீல் கிப்ரான் கவிதைகளில் ஒரு 'தான்' நின்று ஆட்சி செய்யும். ஆண்டாள் கவிதைகள் 'தன்மை' நெகிழ்ந்து நம்மை வசீகரிக்கும் பழனிசாமியின் சொற்களில் இந்த இருவர் கவிதைகளின் ஒரு கூட்டு மொழியை நான் கான்கிறேன்.



No comments:

Post a Comment